கெலமங்கலம் பேரூராட்சியில் 321 பயனாளிகளுக்கு ரூ.2.85 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்
கெலமங்கலம் பேரூராட்சியில் 321 பயனாளிகளுக்கு ரூ.2.85 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணிகிரி மாவட்டம் கெலமங்கலம் பேரூராட்சியில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். பர்கூர் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக இளைஞர்் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு 321 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்து 159 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாமகேஷ்வரி, தேவராஜ், தனி தாசில்தார் சுப்பிரமணி, துணை தாசில்தார்கள் வளர்மதி, கோகுல், வருவாய் ஆய்வாளர்கள் சகுந்தலா, சுபாசினி, அருள்மொழி, மதன்ராஜ், வெற்றி, அம்மு, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஹரீஷ் ரெட்டி, கிருஷ்ணன், வி.டி.ஜெயராமன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேசுகையில், கிராமப்புற மக்கள் பயன் பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார். இந்த ஆட்சியில் மக்களை தேடி அரசு அலுவலர்கள் நேரடியாக சென்று குறைகளை கேட்டு வருகிறார்கள். மறைந்த தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றிய திட்டங்கள் அனைத்தையும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி, முதியோர் உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்துள்ளர்கள். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 72 லட்சம் மதிப்பிலான 5 பிரிவு மையங்கள் தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி பங்கேற்று, சிகிச்சை பிரிவு மையங்களை தொடங்கி வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியின் போது நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமார், தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பரமசிவம் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story