பள்ளிபாளையம் அருகே மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு


பள்ளிபாளையம் அருகே மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 1 Jan 2019 3:15 AM IST (Updated: 31 Dec 2018 11:34 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் அருகே மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள கண்டிபுதூரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் ஜெயபால் (வயது 45). கூலித்தொழிலாளி. ஜெயபால், வேலைக்கு செல்லாமல் இருந்ததாலும், கடனை திருப்ப செலுத்த முடியாததாலும், அவரது மனைவி மல்லிகாவிற்கும் அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஜெயபால், மதுபானத்தில் கரையான் மருந்தை கலந்து மல்லிகாவிற்கு வலுக்கட்டாயமாக கொடுத்ததோடு, வாய் மற்றும் மூக்கை அமுக்கி மல்லிகாவை கொடூரமாக கொலை செய்தார். இது குறித்து பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் அளித்த புகாரின் பேரில் பள்ளிபாளையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

அந்த வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுசீலா வாதாடினார். நேற்று அந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. மனைவியை கொன்ற ஜெயபாலுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து ஜெயபாலை கோவை சிறைக்கு அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Next Story