சென்னை-மதுரை இடையே ‘தேஜஸ்’ சொகுசு ரெயில் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தகவல்
சென்னை-மதுரை இடையே ‘தேஜஸ்’ சொகுசு ரெயில் இயக்கப்படுவது எப்போது? என்பது குறித்து தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தகவல் தெரிவித்தார்.
சென்னை,
தெற்கு ரெயில்வே சார்பில் காகிதமில்லா சேவையின் ஒரு கட்டமாக டிக்கெட் பரிசோதகர்களுக்கு ‘டேப்லெட்’ வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஷ் ரஸ்தா தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் டிக்கெட் பரிசோதகர்களிடம் ‘டேப்லெட்’ வழங்கி இந்த நவீன திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை வணிக மேலாளர் பிரியம்வதா, சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் நவீன் குலாட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஷ் ரஸ்தா நிருபர்களிடம் கூறியதாவது:-
தெற்கு ரெயில்வேயில் முதல் முறையாக டிக்கெட் பரிசோதகர்களுக்கு ‘டேப்லெட்’ பயன்படுத்தும் முறை அறிமுக படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காகிதம் இல்லாமல் டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்ய முடியும். மேலும் இந்த நவீன வசதி மூலம் பயணிகளின் இருக்கை குறித்த தகவல்களை பயணிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்க முடியும்.
இந்த திட்டம் தெற்கு ரெயில்வேயில் உள்ள 2 சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து கோவை மற்றும் மைசூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு 20 ‘டேப்லெட்கள்’ வழங்கப்பட்டுள்ளது.
சென்னை-மதுரை இடையே ‘தேஜஸ்’ சொகுசு ரெயில், வருகிற குடியரசு தினத்துக்கு முன்னதாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ‘தேஜஸ்’ சொகுசு ரெயிலை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கிவைக்க உள்ளதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் 7 மணி நேரத்தில் மதுரைக்கு சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது. வருங்காலத்தில் 6.30 மணி நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story