கோவை மாநகர பகுதியில், திருடப்பட்ட 77 சதவீத பொருட்கள் மீட்பு - போலீஸ் கமிஷனர் சுமித் சரண் தகவல்
கோவை மாநகர பகுதியில் திருடப்பட்ட 77 சதவீத பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் கூறினார். இது தொடர்பாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோவை,
கோவை மாநகர பகுதியில் சாலை போக்குவரத்து மேம்பாடு, விழிப்புணர்வு மற்றும் சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக 2017-ம் ஆண்டை விட கடந்த 2018-ம் ஆண்டில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
2017-ம் ஆண்டு மொத்தம் 1,299 விபத்துகள் நடந்தன. இதில் 277 பேர் இறந்தனர். 2018-ம் ஆண்டில் மொத்தம் 1,113 விபத்துகள் நடந்தன. இதில் 154 பேர் இறந்து உள்ளனர். இதற்கு முக்கிய காரணம், அடிக்கடி விபத்துகள் நடக்கும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு சாலை தடுப்பான் அமைக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள், கல்லூரி மாணவர்களிடம் சாலை விதிகளை கடைபிடிப்பது தொடர்பாக தீவிர விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. எனவே விதிமுறை மீறலும் குறைந்து உள்ளது.
கல்லூரி மாணவர்களை கடுமையாக பாதிக்கும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க கடந்த ஆண்டு தனிப்படை அமைக் கப்பட்டது. அதன்படி 112 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப் பட்டு 647 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதுடன், 116 பேர் கைதாகி உள்ளனர்.
அடிக்கடி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த 2017-ம் ஆண்டில் இந்த சட்டத்தின் கீழ் 73 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் கடந்த ஆண்டில் 140 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
2018-ம் ஆண்டில் 29 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதில் இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய வழக்கில் மட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வில்லை. மற்ற அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் தொடர்பாக கடந்த ஆண்டு 720 வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.4 கோடியே 40 லட்சத்து 34 ஆயிரத்து 265 ஆகும். அதில் ரூ.3 கோடியே 39 லட்சத்து 30 ஆயிரத்து 990 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இது 77 சதவீதம் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story