வடக்கே முளைத்த விடிவெள்ளியால் நாடு முழுவதும் விடியல் ஏற்படும்; புத்தாண்டு செய்தியில், நாராயணசாமி நம்பிக்கை
வடக்கே முளைத்த விடிவெள்ளியால் நாடு முழுவதும் விடியல் ஏற்படும் என்று புத்தாண்டு வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புத்தாண்டையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
2019-ம் ஆண்டு பிறந்துள்ள மகிழ்ச்சியான தருணம் இது. கடந்த ஆண்டு நாம் சந்தித்த சவால்கள் ஏராளம். மக்கள் சேவைக்கு விடப்பட்ட சவால்களை நாம் எதிர்கொண்டு, சாதனைகள் செய்து கொண்டிருக்கிறோம். மக்களால் துரத்தியடிக்கப்பட்ட கூட்டமொன்று பின்வாசல் வழியே அதிகாரம்பெற்று மக்களை பழிவாங்க நினைக்கும் நிலையில் அதனை தடுத்து நிறுத்தி மக்களை காக்கும் ஆண்டாய் 2019 விளங்கும்.
நிதி, சட்டம்-ஒழுங்கு, விவசாயம், தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு என பல துறைகளில் பின்தங்கியிருந்த நம் புதுச்சேரி மாநிலத்தை, அதிலிருந்து மீட்டெடுத்து, வளர்ச்சிப்பாதை நோக்கி பயணிக்க வைக்க அரும்பாடுபட்ட ஆண்டாக 2018 விளங்கியது. அதற்கென அகில இந்திய அளவில் பல விருதுகளை நாம் பெற்றதையும் இங்கு மகிழ்ச்சியோடு குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த புத்தாண்டு நம் புதுச்சேரிக்கு மட்டுமின்றி நம் பாரத நாட்டுக்கே மாற்றத்தை கொண்டுவரும் ஆண்டாக இருக்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. வடக்கே முளைத்த விடிவெள்ளி, நாடு முழுவதும் விடியல் ஏற்படும் என்று கட்டியம் கூறுகிறது. அந்த வெளிச்சத்தில் புதுச்சேரி மாநிலமும் மலர்ச்சி பெறும் என்பது நிச்சயம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காகவே பணியாற்றும் எங்கள் அரசு புதுச்சேரி மாநிலத்தை வளர்ச்சி பாதையில் முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளது. இந்த புத்தாண்டிலும் அதற்கான உறுதிமொழியை நாம் அனைவரும் ஏற்கவேண்டும். சாதி, மத, இன, மொழி பேதங்களால் நம்மை பிரித்தாள நினைப்போரை புறந்தள்ளி இந்த புத்தாண்டில் ஒன்றுபட்ட இந்தியா, மீண்டும் அமைதியையும், வளர்ச்சியையும் நோக்கி பீடுநடை போட பாடுபடுவோம்.
இவ்வாறு முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
சபாநாயகர் வைத்திலிங்கம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அனைவரும் சோதனைகளை எதிர்கொண்டு வெற்றிகளையும், மகிழ்ச்சியையும் பெருக செய்யும் ஆண்டாக 2019-ம் ஆண்டு அமைய வேண்டும். அதுபோல் கடந்த ஆண்டுகளில் வாழ்க்கையில் நடைபெற்ற தீயவைகளை மறந்து நல்லவற்றை மட்டும் மனதில் கொண்டு மகிழ்ச்சியோடு 2019-ம் ஆண்டில் பயணிப்போம். புதுவை யூனியன் பிரதேச மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஆகியவைகளை கொண்டுவரும் ஆண்டாக இந்த ஆண்டு அமையட்டும் என்று கூறியுள்ளார்.
அமைச்சரும், புதுவை காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
உலக மக்கள் அனைவரும் மனமகிழ்ச்சியுடன் கொண்டாடும் திருநாளாக ஆங்கில புத்தாண்டு தினம் திகழ்கிறது. புதிய சிந்தனையுடன் நாட்டின் நலன் காக்க வளமான புதுச்சேரியை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். புதிய உத்வேகத்துடன் புத்தாண்டில் செயலாற்றி மக்கள் நலன் காத்து நிற்போம். அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரம் உயர அயராது பாடுபடுவோம். நமக்கெல்லாம் உணவு தந்துகொண்டிருக்கும் விவசாயிகள் வாழ்க்கைதரம் மேம்படவும், சிறுகுறு தொழில் புரியும் தொழிலாளர்கள் நலன்காக்கவும் இப்புத்தாண்டில் உறுதியேற்போம். ஒட்டுமொத்த இந்திய தேசம் அசுர வளர்ச்சிபெறவும், மக்கள் சக்தியோடு இளந்தலைவர் ராகுல்காந்தி தலைமையில் மத்தியில் மக்களாட்சி மலரவும் எல்லாம்வல்ல இறைவன் அருள் புரிய புத்தாண்டில் மனதார வேண்டுவோம்.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
அமைச்சர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்தியில், நமது புதுச்சேரி யூனியன் பிரதேசம் பல்வேறு முயற்சிகளில் ஆங்காங்கே தடைக்கற்களாக எதிர்ப்படும் பிரச்சினைகளை சமாளித்து வளர்ச்சிப்பாதையை நோக்கி தன்னம்பிக்கையுடன், மன உறுதியுடன் உழைத்து வரும் வேளையில் எதிர்காலத்தை வளமையாக்க அரசுடன் நல்ஒத்துழைப்பை நல்கிவரும் மாநில மக்களின் உள்ளத்தில் ஒரு உவகையை உருவாக்கும் வகையில் புது வரவான புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடி மக்கள் மனதில் எழுச்சி உண்டாக்கி அனைத்து நலன்களுடன் பெருவாழ்வு வாழ அயராது பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்.
அமைச்சர் ஷாஜகான் விடுத்துள்ள செய்தியில், இந்த புத்தாண்டு பல சிறப்புகள் கொண்ட ஆண்டாகவும், எண்ணற்ற பல திருப்புமுனைகளை ஏற்படுத்தும் ஆண்டாகவும் விளங்கப்போகிறது என்றால் அது மிகையாகாது. இந்த புத்தாண்டின் இனிக்கும் செய்தியாக நமது புதுச்சேரி மாநிலம் இந்தியாவிலேயே தொழில்துறையின் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை பாராட்டி உள்ளது. இப்பாராட்டை புதுவை மாநில மக்களுக்கு கிடைத்த பாராட்டாக எண்ணி மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.
முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த புத்தாண்டு புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்து சோதனைகளும், வேதனைகளும் மறைந்து சாதனைகள் நிரம்பி மாற்றம் நிறைந்த ஆண்டாக மலர்ந்திட வேண்டும். புதுவை மக்கள் அனைவருக்கும் எல்லா நலன்களையும், வளங்களையும் வழங்குகிற ஆண்டாகவும் விளங்கவேண்டும். சமத்துவம், சமுதாய நல்லிணக்கம், மதச்சார்பின்மை, அரசியல், சமூக பொருளாதார நிலைகளில் புதுச்சேரி நிலையான, வலுவான முன்னேற்றம் காண அனைவரும் இணைந்து பாடுபடுவோம். எழுச்சிமிகுந்த வளர்ச்சியை வழங்கும் ஆண்டாக இந்த புத்தாண்டு மலரட்டும் என்று கூறியுள்ளார்.
புதுவை எம்.பி. ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தியில், புதுவை மாநிலத்தில் தொழில்வளம் பெருகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நாம் இத்தருணத்தில் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார். அ.தி.மு.க. மாநில செயலாளர் புருஷோத்தமன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும், இல்லாமை அகல வேண்டும், வேளாண்மை சிறக்கவேண்டும், கல்விச்செல்வம் ஓங்கவேண்டும் என்று என்று கூறியுள்ளார்.
அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள செய்தியில், கடந்த ஆண்டின் கோபதாப ஆத்திர செயல்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் கசப்பான அனுபவங்களை மறந்து இப்புதிய ஆண்டில் மானசீக நட்பை பாராட்ட வேண்டும். தனது அறியாமையால் வழி தவறிய இளைஞர்கள் தங்கள் தவறை திருத்திக்கொண்டு நல்வழியில் செல்ல தங்களை நேர்படுத்தி கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் வேல்முருகன் விடுத்துள்ள செய்தியில், சாதி, மத, சமய, இன, மொழி வேறுபாடின்றி எதிர்மறை எண்ணங்களை நீக்கி சுயநலம், வஞ்சகம் ஆகியவற்றை ஒழித்து, மாணவ, மாணவிகள் தங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்தி உலகறிந்திடவும், நம் வாழ்வாதாரமான விவசாயம் செழித்து விவசாயிகளின் புன்முறுவலுடன் இந்த புதிய ஆண்டு பிறக்க எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம். மகிழ்வுடன் புத்தாண்டை வரவேற்று இந்த புத்தாண்டில் அகிலமெல்லாம் அமைதி பரவட்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன், முன்னாள் எம்.பி. ராமதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்தி சேகர், ஆனந்து உள்பட பலரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story