காரைக்குடியில் பெண் போலீஸ் விஷம் குடித்தார்
காரைக்குடியில் பெண் போலீஸ் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றி வருபவர், சாவித்திரி (வயது 32). அவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் சாவித்திரி தனது 10 வயது மகளுடன் காரைக்குடியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
மேலும் கடந்த 3 ஆண்டுகளாக கணவர் பேசாததால் சாவித்திரி மனவருத்தம் அடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விடுமுறை எடுத்து இருந்தாராம். கடந்த வாரம் தனது மகளுடன் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த சாவித்திரி அதன்பின்பு வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் பணிக்கு செல்ல வேண்டிய சாவித்திரி, திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் இதை கவனித்து, அவரை காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு அங்கிருந்து சாவித்திரி, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார்.
இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெண் போலீஸ் தற்கொலை முயற்சிக்கு குடும்ப பிரச்சினைதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story