‘தொழில் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம் ’ அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி
தொழில் முனைவோருக்கு அனைத்து உதவிகளையும் செய்து தருவோம் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
விருதுநகர்,
உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற இருப்பதை முன்னிட்டு விருதுநகரில் மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முதலீட்டாளர்களுக்கான சிறப்பு கூட்டம், கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடந்தது. அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முதலீட்டாளர்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார். அப் போது அவர் தெரிவித்ததாவது:–
அருப்புக்கோட்டையில் நெசவு தொழிலுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். தொழில் முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக தமிழக அரசு செய்து தரும். சாலை வசதி, தண்ணீர் வசதி, மின்சார வசதி, அனுமதி ஆணை உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளும் உடனடியாக செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மாவட்டம் மட்டுமின்றி தொழில் தொடங்க ஆர்வமுள்ள பிற மாவட்ட தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இங்கு தொழில் தொடங்கி பயன்பெற கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.
கூட்டத்தில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., தொழில் மைய பொது மேலாளர் மாரிமுத்து, துணை இயக்குநர்கள் கமலக்கண்ணன், முருகேசன், விருதுநகர் தொழில் வர்த்தக சங்கத்தலைவர் யோகன், மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கவுரவத்தலைவர் பிருந்தாவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ரூ.800 கோடியளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், இதுவரை ரூ.837 கோடிஅளவிற்கு 344 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டம் தொழிலாளர்கள், தொழில் அதிபர்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மாவட்டமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ரூ.1000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, சுமார் 500 புதிய முதலீட்டாளர்களை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அருப்புக்கோட்டையில் நெசவு தொழிலுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். தொழில் முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக தமிழக அரசு செய்து தரும். சாலை வசதி, தண்ணீர் வசதி, மின்சார வசதி, அனுமதி ஆணை உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளும் உடனடியாக செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மாவட்டம் மட்டுமின்றி தொழில் தொடங்க ஆர்வமுள்ள பிற மாவட்ட தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இங்கு தொழில் தொடங்கி பயன்பெற கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.
கூட்டத்தில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., தொழில் மைய பொது மேலாளர் மாரிமுத்து, துணை இயக்குநர்கள் கமலக்கண்ணன், முருகேசன், விருதுநகர் தொழில் வர்த்தக சங்கத்தலைவர் யோகன், மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கவுரவத்தலைவர் பிருந்தாவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story