விருதுநகர் மாவட்டம் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதிலும் முதலிடம் பெறும்; அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நம்பிக்கை
பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை அமல் படுத்துவதிலும் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெறும் என அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறினார்.
விருதுநகர்,
பிளாஸ்டிக் மீதான தடை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி விருதுநகரில் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சிவஞானம் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார். உறுதி மொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது. தடை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், மாற்றுப்பொருட்கள்அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதனை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அமல் படுத்துவதில் மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்கும். தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டால் தமிழக அரசு விதித்துள்ள பிளாஸ்டிக்குக்கான தடையை அமல் படுத்துவதிலும் இந்த மாவட்டம் முதலிடம் பெறும்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை விதிக்கப்பட்டுள்ளதால் அந்த பொருட்களின் உற்பத்தியாளர்களும் அதை உணர்ந்து செயல்படுவார்கள். என்னை சந்திக்க வந்த பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்களிடம் நானும் மக்கள் நலன் கருதி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். அவர்களும் தடை விதிக்கப்படாத பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி தொடர்ந்து செய்வதற்கு வாய்ப்புள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சுகாதாரம் மேம்பட தனிநபர் கழிப்பறைகள் கட்டப்படுவதற்கு கிராமப்புறங்களிலும் நகர்புறங்களிலும் மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது. கிராமப்புறங்களில் தனிநபர் கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரமும் நகர்ப்புறங்களில் ரூ.8 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இந்த மாவட்டம் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்கி வருவதோடு தூய்மை இந்தியா திட்டத்தை நிறைவேற்றுவதிலும் முன்னோடி மாவட்டமாக விளங்கி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்தை பொறுத்தமட்டில் அவர் சிறந்த நடிகர், மனிதர் நல்ல கருத்துகளை கூறி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி அவரை சந்திப்பதில் தவறில்லை. தனிப்பட்ட முறையில் சந்திப்பதால் கூட்டணி ஏற்பட்டுவிடும் என்று கூற முடியாது. பொதுவாக தலைவர்கள் விமர்சிக்கப்படுவது இயல்புதான். ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல் போன்ற தலைவர்களும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து தனது உழைப்பால் பிரதமர் ஆகியுள்ளார். சிறப்பாக பணியாற்றி வருகிறார். பொதுவாக கூட்டணி என்பதையெல்லாம் தேர்தல் அறிவித்த பின்புதான் அரசியல் கட்சிகள் முடிவெடுக்கும். அதேபோன்று அ.தி.மு.க.வும் தேர்தல் அறிவித்த பின்பு தொண்டர்களின் விருப்பப்படி வெற்றி கூட்டணி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story