மாவட்ட செய்திகள்

நெல்லை வீரமாணிக்கபுரத்தில்குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்பொதுமக்கள் கோரிக்கை + "||" + Nellai Veeramanathirapuram Need to rearrange the road in the pit and pit Public request

நெல்லை வீரமாணிக்கபுரத்தில்குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை வீரமாணிக்கபுரத்தில்குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்பொதுமக்கள் கோரிக்கை
நெல்லை வீரமாணிக்கபுரத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை,

நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 28-வது வார்டில் உள்ள வீரமாணிக்கபுரம் எதிர்புறம் உள்ள சியோன்நகர், பாண்டித்துரை 1-வது தெரு, காந்திபுரம் 2-வது தெரு, மாசிலாமணிநகர் உள்ளிட்ட தெருக்களில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. மழைக்காலங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்கள் செல்லமுடியாத நிலையில் உள்ளன. இதிலும் வீரமாணிக்கபுரத்தின் தெற்கு பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது.

தற்போது அந்த பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காகரோட்டை உடைத்து குழிதோண்டி உள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மண்சாலை போல மோசமாக உள்ளது. மழை பெய்தால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாது. தற்போது அந்த பகுதியில் உள்ள கார்களை ரோட்டில் நிறுத்திவிட்டு வீடுகளுக்கு நடந்து செல்லக்கூடிய நிலை உள்ளது. எனவே அந்த பகுதி மக்கள் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைவாக முடித்து சாலை அமைக்கவேண்டும் என்று கூறுகிறார்கள்.

மேலும் இந்த சாலைகளை சீரமைத்து தரவேண்டும் என்று பலமுறை மாநகராட்சி அலுவலகத்தில் அந்த பகுதி மக்களும், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகமும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாநகராட்சி கூட்டத்தில் அப்போதைய கவுன்சிலர் ஆறுமுகம் பேசிய பிறகு வீரமாணிக்கபுரம் எதிர்புறம் உள்ள சியோன்நகர் பகுதியில் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. பின்னர் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சாலைகள் சீரமைக்காமல் மோசமான நிலையில் உள்ளது. குடிநீர் பைப்லைன் பதிக்கும் பணியை விரைவாக முடித்து அந்த பகுதியை புதிய தார்சாலை போடவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை