ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்ததால் தி.மு.க. கூட்டணி சேர்த்து வருகிறது - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்ததால் தி.மு.க. கூட்டணி சேர்த்து வருகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
சோழவந்தான்,
மதுரையை அடுத்த கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராபட்டி கிராமத்தில் நாடக மேடை கட்டித்தர கோரி கிராம மக்கள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில் தாராபட்டியில் நாடக மேடை கட்ட ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தநிலையில் நாடக மேடை கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பூமிபூஜையை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி முன்னாள் மேயர் திரவியம், பரவை பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திருப்பரங்குன்றம் ஒன்றிய ஆணையாளர் சோனா பாய், கூடுதல் ஆணையாளர் முருகன், பொறியாளர் அனிதா, கூட்டுறவு சங்கத்தலைவர் முத்து மாயாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
நாளை (இன்று) முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுகிறது. முன்னதாக தமிழகம் முழுவதும் மக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து அரசின் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. தற்போது பொதுமக்களும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து உள்ளனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும். அதற்குரிய தேர்தல் வியூகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் வகுத்து வருகின்றனர். ஆனால் ஸ்டாலின் அவசர, அவசரமாக கூட்டணிகளை அமைத்து வருகின்றார். ஏனென்றால் கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. டெபாசிட் கூட பெற முடியவில்லை. இந்த பயத்தில் கூட்டணி சேர்த்து வருகிறார். எத்தனை கூட்டணி அமைத்தாலும், தி.மு.க. தோல்வி அடைவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story