ரிஷிவந்தியம் அருகே மினிலாரி மோதி சிறுவன் பலி
ரிஷிவந்தியம் அருகே மினிலாரி மோதி சிறுவன் உயிரிழந்தான்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அருகே அத்தியூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கிஷோர்(வயது 5). அதேஊரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தான். இவன் நேற்று வீட்டின் எதிரே உள்ள சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தொழுவந்தாங்கல் கிராமத்தில் இருந்து அத்தியூர் நோக்கி சென்ற மினிலாரி ஒன்று, சாலையோரம் விளையாடிய கிஷோர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் கிஷோர் ஏற்கனவே இறந்து விட்டான் என தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்த கிஷோரின் உடலை பார்த்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி பகண்டைகூட்டுரோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விபத்தை ஏற்படுத்திய மினிலாரி டிரைவர் தொழுவந்தாங்கலை சேர்ந்த சவுந்தர் என்பவர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story