தமிழர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


தமிழர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2019 5:15 AM IST (Updated: 1 Jan 2019 5:15 AM IST)
t-max-icont-min-icon

சயான் கோலிவாடா தமிழர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை சயான் கோலிவாடா கோக்ரிஅகார் பகுதியை சேர்ந்தவர் டி.பி ராஜா. இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் ஊஞ்சனை கிராமம் ஆகும். இவர் சமீபத்தில் வீட்டில் வைத்து மர்ம ஆசாமிகளால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் டி.பி. ராஜாவின் நண்பர்கள் 2 பேர் சொத்து தகராறு மற்றும் பண பிரச்சினையால் அவரை கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் ஏற்கனவே ராஜஸ்தானில் பதுங்கி இருந்த அம்ஜத்கானை போலீசார் கைது செய்தனர்.

மேலும் முக்கிய குற்றவாளியான இம்ரான் குரேஷி தலைமறைவாக இருந்து வந்தார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் அவர் கலம்பொலியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நேற்று அதிகாலை அங்குள்ள பஸ்நிறுத்தம் அருகே வைத்து இம்ரான் குரேஷியை கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 10-ந்தேதி வரை அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

Next Story