மாவட்ட செய்திகள்

பழைய காலனி வீடுகளை பழுது பார்க்க ரூ.10½ கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல் + "||" + Minister MR Vijayabaskar informed that Rs 10.5 crore will be allocated for repairing old colony houses

பழைய காலனி வீடுகளை பழுது பார்க்க ரூ.10½ கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

பழைய காலனி வீடுகளை பழுது பார்க்க ரூ.10½ கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
பழைய காலனி வீடுகளை பழுது பார்க்க ரூ.10½ கோடி நிதி ஒதுக்கீடு என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர்,


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை மற்றும் கடவூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் பழைய காலனி வீடுகளை பழுது நீக்கி கொள்ளுவதற்கான நிதியுதவி மற்றும் வேலை உத்தரவு ஆணை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். பாராளுமன்ற துணை சாபநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயாபாஸ்கர் கலந்து கொண்டு பழைய காலனி வீடுகளை பழுது நீக்கி கொள்ளுவதற்கான நிதியுதவி மற்றும் வேலை உத்தரவுகளை வழங்கினர்.அப்போது இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவிக்கையில்,

கரூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட காலனி வீடுகளை பழுது நீக்கித் தர அதிகளவில் கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. பழைய வீடுகளை பழுது நீக்க சட்டமன்ற மேம்பாட்டு நிதியை மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தற்போது தமிழ்நாடு முதல்–அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சிறப்பு நிதி பெற்று ஒரு வீட்டிற்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது.


கரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 300 வீடுகளும், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் 350 வீடுகளும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 150 வீடுகளும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 300 வீடுகளும், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் 130 வீடுகளும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 300 வீடுகளும், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 250 வீடுகளும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 314 வீடுகளும் என மொத்தம் 2094 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அதற்காக ரூ.10 கோடியே 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வேலை உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் 994 வீடுகளுக்கு ரூ.4 கோடியே 97 லட்சம் மதிப்பிலான வேலை உத்தரவுகள் வழங்கப்படுள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.கீதா, வருவாய் கோட்டாட்சியர் லியாகத், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உமாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, மனோகரன், தவமணி, ராஜேந்திரன், வட்டாட்சியர்கள் சுரேஷ்குமார், கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுவனை கொன்ற வழக்கில் தாய் மாமனுக்கு ஆயுள் தண்டனை நாகை கோர்ட்டு உத்தரவு
வேளாங்கண்ணியில் சிறுவனை கொன்ற வழக்கில் தாய்மாமனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை கோர்ட்டு உத்தரவிட்டது.
2. காசோலை மோசடி வழக்கில் பால் வியாபாரிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு
காசோலை மோசடி வழக்கில் பால் வியாபாரிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. லஞ்சம் வாங்கும் போலீசார் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு; நீதிபதி உத்தரவு
லஞ்சம் வாங்கும் போலீசார் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
4. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு? முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு பேட்டி
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு குறித்து, முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.
5. தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வதை கள ஆய்வு செய்ய வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வதை அதிகாரிகள் கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை