வானவில் : நீருக்கு மேலே பறக்கும் ஏர்பிஷ் விமானம்
தண்ணீருக்கு மேலே பறக்கும் நீர்ப்பறவையை போல இருக்கிறது இந்த குட்டி விமானம்.
இந்தோனேஷியா மற்றும் கரீபியன் போன்ற தீவுகளில் பெரும்பாலும் வேகம் குறைவான கடல்வழி போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனம் விமானம் போல் வேகமாக பறக்க கூடிய ஒரு விமானத்தை உருவாக்கியுள்ளது. ஏர்பிஷ் என்று பொருத்தமாக பெயரிட்டு இதனை அழைக்கின்றனர். தண்ணீர் பரப்புக்கு சற்று மேல் பறக்கும் இந்த விமானம் நீருக்கும் தனக்கும் இடையே ஒரு அழுத்தத்தினை உருவாக்கிக் கொண்டு அதன் மூலம் பறக்கிறது. 106 நாட்டிகல் அல்லது மணிக்கு 120 மைல் வேகத்தில் பறக்கக்கூடியது. எரிபொருளும் சிக்கனமாக உபயோகிக்கும்.
திடீரென்று என்ஜினில் பழுது ஏற்பட்டால் தானே நிறுத்தத்திற்கு வந்து தண்ணீருக்கு மேலே பாதுகாப்பாக நின்று விடுகிறது. அதனால் விபத்து ஏற்படும் என்ற பயமின்றி இதில் பயணிக்கலாம். தற்போது எட்டு பயணிகளை மட்டுமே கொண்டு பறக்கக்கூடிய சிறிய விமானமாக தயாரிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் நாற்பது பயணிகளுடன் பறக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ளதாம்.
Related Tags :
Next Story