வானவில் : புத்துணர்ச்சி தரும் ‘மூன்போட்’
நம்மூரில் பீன்பேக்-ஐ பலரும் பயன்படுத்தியிருப்பர். பொதுவாக சிறுவர்கள் மற்றும் இளம் வயதுப் பிரிவினரின் தேர்வாகத்தான் இது உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ‘மூன்போட்’ என்ற பெயரிலான புதிய வகை பீன்பேக்-ஐ வடிவமைத்துள்ளது. இது தரையிலிருந்து முற்றிலும் புவியீர்ப்பு விசை இல்லாத வகையில் (பூஜ்ஜியம் டிகிரி கிராவிடேஷனல் போர்ஸ்) உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அமர்ந்து டி.வி. பார்க்கலாம். அலுவலக நாற்காலி போல உட்கார்ந்து லேப்டாப்பை பயன்படுத்தலாம். இரவு நேரத்தில் படுத்து தூங்கலாம்.
இதில் மைக்ரோ பீட் உள்ளது. இதனால் இதில் படுத்து தூங்கும்போது மிகச் சிறந்த புத்துணர்ச்சி கிடைக்கும். பகல் நேரங்களில் இதில் சிறிது நேரம் ஓய்வெடுத்தால் கூட புத்துணர்வு கிடைப்பதாக இதை பயன்படுத்தியவர்கள் கூறுகின்றனர்.
இதன் உயரம் 56 அங்குலம், அகலம் 22 அங்குலம், இதன் தடிமன் 22 அங்குலமாகும். இதன் எடை 5 கிலோ 400 கிராம் மட்டுமே. இது அதிக இடத்தை அடைத்துக் கொள்ளாது. இதை எடுத்துச் செல்வது எளிது.
Related Tags :
Next Story