வானவில் : விண்வெளி ஆராய்ச்சிப் பணியில் ரோபோ
செயற்கைக் கோள்களின் மூலம் மற்ற கிரகங்களில் நடப்பவற்றை ஆராய்ந்து வருவது அனைவரும் அறிந்ததே.
இந்த பணியில் ரோபோக்களை பயன்படுத்துவது குறித்து சுவிட்சர்லாந்து நாட்டில் ஆராய்ச்சி செய்து, ஸ்பேஸ்பாக் என்ற இந்த நவீன ரோபோவை உருவாக்கியுள்ளனர். இந்த பணிக்காக முன்பு படைக்கப்பட்ட ரோபோக்களின் சக்கரங்கள் மணலில் சிக்குவதோ அல்லது புதைந்து போவதோ நிகழ்ந்து வந்தது. ஆனால் இந்த ரோபோவில் இத்தகைய குறைகளை நிவர்த்தி செய்துள்ளனர்.
நான்கு கால்களுடன் பார்ப்பதற்கு ஒரு பெரிய பூனை போன்ற தோற்றத்தில் இருக்கும் இது, செவ்வாய் கிரகத்தின் கடினமான தரைப் பரப்பில் கூட நடக்கும். இதன் கால்களுக்குள்ளே ஸ்பிரிங் கொடுக்கப்பட்டுள்ளதால் காற்றில் ஒரு மீட்டர் வரை மேலே எழும்பி குதிக்கும்.
சமமில்லாத, அடர்த்தியான பரப்பில் செயலாற்றக்கூடிய இந்த ரோபோ, மெதுவாக நடக்கும். அதிவேகமாக ஓடும்.
முற்றிலும் தானியங்கியாக செயல்படும் இது ஆய்வுகளை மிகத் தெளிவாக விஞ்ஞானிகளுக்கு அனுப்பி வைக்கும். சக்கரத்தில் நடக்கும் ரோபோக்களை விட இது ஆற்றல் வாய்ந்தது என்கின்றனர் இந்த அற்புதமான ரோபோவை தயாரித்தவர்கள்.
Related Tags :
Next Story