தமிழ் பண்பாட்டின் முக்கியமான அடையாளம் திருவள்ளுவர் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி
தமிழ் பண்பாட்டின் முக்கியமான அடையாளமாக திருவள்ளுவர் திகழ்கிறார் என தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் கூறினார்.
தஞ்சாவூர்,
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் அடுத்த மாதம்(பிப்ரவரி) 22–ந் தேதி தொடங்கி 24–ந் தேதி வரை உலக திருக்குறள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு கொண்டு செல்வதற்காக தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் உள்ள ஒரு சிற்பக்கூடத்தில் ரூ.1½ லட்சம் மதிப்பில் 3½ அடி உயரத்தில் 920 கிலோ எடை கொண்ட திருவள்ளுவர் சிலை செய்யப்பட்டது.
இந்த சிலை, மினி வேனில் வைக்கப்பட்டு ஊர்வலமாக தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அங்கு திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் மாலை அணிவித்தார்.
தொடர்ந்து சிலைக்கு பதிவாளர் முத்துக்குமார், அயல்நாட்டு கல்வித்துறை தலைவர் குறிஞ்சிவேந்தன், ஆட்சிக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், தமிழ்த்தாய் அறக்கட்டளை மாநாட்டு செயலாளர் உடையார்கோவில் குணா, பேராசிரியர் துரை.மாணிக்கம் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவிகள் மலர்தூவினர். இதையடுத்து மாணவிகளின் பரதநாட்டியம், யோகாசனம் நடைபெற்றது. 20 நிமிடத்தில் திருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக மாணவர் ஒருவர் வரைந்தார்.
முன்னதாக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழ் பண்பாட்டின் மிக முக்கியமான அடையாளம் திருவள்ளுவர் சிலை. உலகம் முழுவதும் நமது பண்பாட்டை பரவ செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் தமிழ்ப்பல்கலைக்கழகம் சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு வரவேற்பு கொடுத்து இருக்கிறோம். வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு பரதநாட்டியம், நாட்டுப்புற கலைகளை கற்றுக்கொடுத்து வருகிறோம்.
தமிழ் பண்பாட்டு மையத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. வளர்தமிழ் மையத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து விரைவில் அரசாணை வரும். தமிழக அரசு வழங்கிய நிதியின் மூலம் 38 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ஆய்வு நல்கை நிதி வழங்கப்பட்டுள்ளது. புதிய நூல்களை பதிப்பு செய்ய தமிழக அரசு உதவி செய்து வருகிறது.
தமிழ்ப்பல்கலைக்கழகம் சார்பில் 509 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் 237 நூல்கள் அச்சில் இல்லை. இதில் 200 நூல்களை மறுபடியும் அச்சிட்டு மறுபதிப்பு செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த திருவள்ளுவர் சிலை இன்று(வியாழக்கிழமை) தஞ்சையில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு திருச்சி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம் வழியாக நாளை(வெள்ளிக்கிழமை) சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அந்த சிலை, சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் மலேசியாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மாநாடு முடிவடைந்தவுடன் ஏதாவது ஒரு தமிழ்ப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படுகிறது.

Related Tags :
Next Story