தனியாக வசித்து வந்த பெண் வீட்டில் ரத்தக்காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
பாபநாசம் அருகே தனியாக வசித்து வந்த பெண் வீட்டில் ரத்தக்காயங்களுடன் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாபநாசம்,
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கோபுராஜபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் பிரகாஷ்(வயது 25). பட்ட தாரியான இவர், கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் மீண்டும் வெளி நாட்டுக்கு செல்ல முயற்சி செய்து வந்தார்.
சம்பவத்தன்று பிரகாஷ் தந்தை ரவியை ஒரு பெண் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். பாபநாசம் அம்மன் நகர் பகுதியில் இருந்து பேசுவதாக கூறிய அந்த பெண் ரவியிடம், உங்கள் மகன் பிரகாஷ் எனது வீட்டில் இறந்து கிடக்கிறார் என கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி, பாபநாசம் அம்மன் நகரில் உள்ள சம்பந்தப்பட்ட பெண் வீட்டுக்கு சென்றார். அப்போது அந்த பெண் வீட்டின் மாடியில் பிரகாஷ் பிணமாக கிடந்தார்.
அவரது தலையின் பின் பகுதியில் ரத்தக்காயம் இருந்தது. மேலும் அருகில் ரத்தக்கறை படிந்த வேட்டியும் கிடந்தது. மகன் உடலை பார்த்து கதறி அழுத ரவி இது குறித்து பாபநாசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரகாஷ் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தஞ்சையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வாலிபர் இறந்து கிடந்த வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள பாபநாசம் போலீஸ் நிலையத்துக்கு ஓடி வந்தது. பின்னர் போலீஸ் நிலையத்தில் இருந்த சம்பந்தப்பட்ட பெண் அருகே நின்றது.
இது குறித்து பாபநாசம் போலீசார் மர்ம சாவு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பிரகாஷ் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் பிணமாக கிடந்த வீட்டில் வசித்து வந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி கணவரும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அந்த பெண்ணின் கணவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மகனும், மகளும் வெளியூரில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அந்த பெண் மட்டும் இங்கு தனியாக வசித்து வருகிறார்.
பெண் ஒருவர் வீட்டில் வாலிபர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்த சம்பவம் பாபநாசம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story