நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் காங்கிரஸ் முன்னாள் மந்திரி எச்.எம்.ரேவண்ணா பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் காங்கிரஸ் முன்னாள் மந்திரி எச்.எம்.ரேவண்ணா பேட்டி
x
தினத்தந்தி 2 Jan 2019 10:30 PM GMT (Updated: 2019-01-03T00:20:29+05:30)

நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் முன்னாள் மந்திரி எச்.எம்.ரேவண்ணா கூறினார்.

பெங்களூரு, 

நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் முன்னாள் மந்திரி எச்.எம்.ரேவண்ணா கூறினார்.

கலாசாரம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான எச்.எம்.ரேவண்ணா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

குருபா சமூகம் பற்றிய 13 புத்தகங்கள் வெளியிடப்படுகிறது. இந்த புத்தகங்கள் பெங்களூருவில் 5-ந் தேதி வெளியாகிறது. இந்த புத்தகங்களில் குருபா சமூகம் பற்றிய வரலாறு மற்றும் முழு விவரங்கள் இருக்கிறது. குருபா சமூகத்தின் கலாசாரம், கலை, விளையாட்டு போன்ற விஷயங்களும் அதில் இடம் பெற்றுள்ளது.

பெங்களூரு வடக்கு தொகுதியில்...

கடந்த சட்டமன்ற தேர்தலில் மாகடி அல்லது ஹெப்பால் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருந்தேன். ஆனால் கட்சியின் உத்தரவுப்படி நான் ெசன்னபட்டணாவில் போட்டியிட்டேன். எனக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. மற்ற வாய்ப்புகளும் கிடைக்காமல் போய்விட்டன.

அதனால் நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். இதுபற்றி எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து உள்ளேன்.

நான் கட்டுப்படுவேன்

கட்சி எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். அந்த தொகுதியில் தேவேகவுடா போட்டியிடுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

இவ்வாறு எச்.எம்.ரேவண்ணா கூறினார்.

Next Story