ஈஞ்சம்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய கார்; ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மீது மோதல், பெண் படுகாயம்


ஈஞ்சம்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய கார்; ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மீது மோதல், பெண் படுகாயம்
x
தினத்தந்தி 3 Jan 2019 4:15 AM IST (Updated: 3 Jan 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் தாறுமாறாக ஓடிய கார் ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் பெண் படுகாயமடைந்தார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த தாம்பரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 47). இவர், நேற்று புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்தார். ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி, ஈஞ்சம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ, 5 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. மேலும் கார் மோதியதால் ஆட்டோ மற்றும் 5 மோட்டார் சைக்கிள்களும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சாலையை கடந்து செல்ல முயன்ற ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆனந்தலட்சுமி (50) என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது பற்றி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story