பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை எதிர்த்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்


பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை எதிர்த்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2019 3:45 AM IST (Updated: 3 Jan 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை எதிர்த்து சிறு, குறு வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 


தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தண்ணீர் குவளைகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்களுக்கு நேற்று முன்தினம் முதல் தடை விதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது. இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த வலியுறுத்தியும் சிறு, குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரியும் தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று முன்தினம் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தை தொடங்கினர்.

இதையொட்டி விழுப்புரத்தில் எம்.ஜி. சாலை, பாகர்ஷா வீதி, நேருஜி சாலை, காமராஜர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து சிறு, குறு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தை சேர்ந்த சிறு, குறு வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story