மறு சுழற்சி செய்ய ஏற்பாடு: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு


மறு சுழற்சி செய்ய ஏற்பாடு: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 2 Jan 2019 10:30 PM GMT (Updated: 2 Jan 2019 8:28 PM GMT)

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை திரும்ப பெற்று மறு சுழற்சி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்,

கலெக்டர் சிவஞானம் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பிளாஸ்டிக் தடை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், வணிகர்கள், அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் பொது மக்கள் தங்களிடம் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைக்காமல் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் உள்ளாட்சி அமைப்புகள் அல்லது பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்யலாம். அரசின் இந்த ஏற்பாட்டுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு உருவாக அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


Next Story