திருப்புவனம் அருகே மாமனார்-மாமியார் தகராறு புதுப்பெண் உயிரை பறித்தது
திருப்புவனம் அருகே மாமனார்-மாமியார் தகராறு புதுப்பெண்ணின் உயிரை பறித்த பரிதாப சம்பவம் நேர்ந்தது.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பழையனூரை அடுத்த பத்துப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். அவருடைய மனைவி இருளாயி. இவர்களது மகன் பாண்டி (வயது 25). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சங்கம்மாள்(19), என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் பெருமாளுக்கும், அவருடைய மனைவி இருளாயிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் பெருமாள் தனது மனைவியை திட்டினார். இதில் கோபமடைந்த இருளாயி அது குறித்து தனது மகன் பாண்டியிடம் முறையிட்டுள்ளார்.
பெற்றோரின் தகராறால் மனம் உடைந்த பாண்டி விஷம் குடித்துள்ளார். தனது கணவர் விஷம் குடித்ததைப் பார்த்து சங்கம்மாளும் விஷம் குடித்து விட்டாராம்.
இதையடுத்து விஷம் குடித்த புதுப்பெண்ணையும், அவருடைய கணவரையும் உறவினர்கள் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாண்டி குணமடைந்த நிலையில், அவரது மனைவி சங்கம்மாள் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன் விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் முடிந்து 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்ததால் சப்-கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கணவன்-மனைவி தகராறு அவரது மகனை விஷம் குடிக்க வைத்ததுடன், வாழ வந்த மருமகளின் உயிரையும் பறித்தது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Tags :
Next Story