அம்மா திட்ட முகாம் நாளை நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் ஷில்பா அறிவிப்பு


அம்மா திட்ட முகாம் நாளை நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் ஷில்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Jan 2019 10:00 PM GMT (Updated: 2 Jan 2019 11:12 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்களை கலெக்டர் ஷில்பா அறிவித்துள்ளார்.

நெல்லை, 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை மக்களின் நலன்கருதி அம்மா திட்ட முகாமை அறிவித்தார். அதன்படி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இந்த முகாமானது அந்தந்த தாசில்தார் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த வாரத்திற்கான முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்த முகாம் நெல்லை தாலுகாவில் பாலாமடை, காட்டாம்புளி கிராமத்திலும், ராதாபுரம் தாலுகாவில் அ.திருமலாபுரத்திலும், அம்பை தாலுகாவில் ஈசானமடம் கிராமத்திலும், நாங்குநேரி தாலுகாவில் அ.சாத்தான்குளத்திலும், சேரன்மாதேவி தாலுகா வடக்கு வீரவநல்லூரிலும், பாளையங்கோட்டை தாலுகா திருவண்ணாதபுரத்திலும், சங்கரன்கோவில் தாலுகாவில் அச்சம்பட்டியிலும், திருவேங்கடம் தாலுகாவில் சாயமலை பகுதி-1, வீரகேரளம்புதூர் தாலுகா அச்சங்குட்டத்திலும், ஆலங்குளம் தாலுகா காசிக்குவாய்ந்தானிலும், கடையநல்லூர் தாலுகா கடையநல்லூரிலும், திசையன்விளை தாலுகாவில் கோட்டைகருங்குளம் பகுதி-2 கிராமத்திலும் நடக்கிறது.

இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு அட்டை, சாலை மற்றும் குடிநீர் வசதி மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த மனுக்களை வழங்கி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story