புத்தாண்டு கொண்டாட்டத்தில் 2 பெண்கள் மானபங்கம் 2 வாலிபர்கள் கைது


புத்தாண்டு கொண்டாட்டத்தில் 2 பெண்கள் மானபங்கம் 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 3 Jan 2019 4:46 AM IST (Updated: 3 Jan 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

இருவேறு இடத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 2 பெண்களை மானபங்கம் செய்த வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

இருவேறு இடத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 2 பெண்களை மானபங்கம் செய்த வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மானபங்கம்

மும்பை சாந்தாகுருசை சேர்ந்த 25 வயது இளம்பெண் பாந்திரா எஸ்.வி.சாலையில் உள்ள கேளிக்கை விடுதியில் நண்பர்கள் மற்றும் சகோதரிகளுடன் புத்தாண்டை கொண்டாடி கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தை பயன்படுத்தி அங்கிருந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை தொட்டும், ஆடையை பிடித்து இழுத்தும் மானபங்கம் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவரை பிடித்து தட்டிக் கேட்டார். இதில் இருவருக்கும் இடையே சண்டை உண்டானது. இதையடுத்து அந்த இளம்பெண் இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தார்.

2 வாலிபர்கள் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை மானபங்கம் செய்ததாக அண்டாப்ஹில்லை சேர்ந்த ஜான் பெர்னான்டோ (26) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் மும்பை பாந்திரா மேற்கு பகுதியை சோ்ந்த 19 வயது இளம்பெண் பாந்திரா காா்டர் சாலையில் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடினார். அப்போது வாலிபர் ஒருவர் இளம்பெண்ணின் உடலில் தொடக்கூடாத இடத்தை தொட்டு மானபங்கம் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார், இளம்பெண்ணை மானபங்கம் செய்த பாந்திரா கிழக்கு பகுதியை சேர்ந்த சேகர் எட்ஜீயான் (வயது 34) என்பவரை கைது செய்தனர்.

Next Story