மாவட்டத்தில் மாணவிகளுக்கு 3-ம் பருவ பாடபுத்தகங்கள் முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்


மாவட்டத்தில் மாணவிகளுக்கு 3-ம் பருவ பாடபுத்தகங்கள் முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்
x
தினத்தந்தி 4 Jan 2019 4:00 AM IST (Updated: 3 Jan 2019 11:24 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 3-ம் பருவ பாடபுத்தகங்களை மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வழங்கினார்.

கிருஷ்ணகிரி, 

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை முப்பருவமுறை, தொடர் மதிப்பீட்டு முறை பின்பற்றப்படுகிறது. அதன்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவமாகவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை 2-ம் பருவமாகவும், ஜனவரி முதல் ஏப்ரல் 3-ம் பருவமாக பிரிக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2018-19-ம் கல்வி ஆண்டில் பயிலும் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3-ம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பாடபுத்தங்களை வழங்கினார். இது குறித்து அவர் பேசியதாவது:- 3-ம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், கணித உபகரண பெட்டிகள் உள்ளிட்டவை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து தொடக்கபள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 197 மாணவ, மாணவிகளுக்கும், இடைநிலை பள்ளிகளில் பயிலும் 76 ஆயிரத்து 306 மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆய்வாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story