கேரளாவில் முழுஅடைப்பு: தென்காசியில் அத்தியாவசிய பொருட்கள் தேக்கம் போக்குவரத்து முடங்கியது


கேரளாவில் முழுஅடைப்பு: தென்காசியில் அத்தியாவசிய பொருட்கள் தேக்கம் போக்குவரத்து முடங்கியது
x
தினத்தந்தி 4 Jan 2019 3:30 AM IST (Updated: 4 Jan 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் நேற்று நடைபெற்ற முழு அடைப்பில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து இருமாநிலத்துக்கும் இடையே போக்குவரத்து முடங்கியது.

தென்காசி, 

கேரளாவில் நேற்று நடைபெற்ற முழு அடைப்பில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து இருமாநிலத்துக்கும் இடையே போக்குவரத்து முடங்கியது. இதனால் கேரளாவுக்கு செல்ல வேண்டிய பூ, அத்தியாவசிய பொருட்கள் தென்காசியில் தேக்கம் அடைந்துள்ளன.

கேரளாவில் முழு அடைப்பு

சபரிமலையில் நேற்று முன்தினம் கனகதுர்கா, பிந்து என்ற 2 இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். இதை கண்டித்து கேரள மாநிலத்தில் நேற்று அம்மாநில இந்து அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. முழுஅடைப்பு காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. செங்கோட்டையில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் 10-க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் அய்யப்ப பக்தர்கள் அவதிக்கு உள்ளாகினர்.

பொருட்கள் தேக்கம்

இதனால் தென்காசி பகுதியிலிருந்து தினமும் கொண்டு செல்லப்பட்டு வந்த பூ மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கேரளாவிற்கு அனுப்ப முடியாமல் தேக்கமடைந்தன. இவை புதிய பஸ்நிலையத்தில் தேங்கி கிடக்கின்றன. மேலும் தமிழக பகுதியில் இருந்து கேரளத்துக்கு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. அனைத்து வாகனங்களும் தமிழக-கேரள எல்லையில் நிறுத்தப்பட்டன.

எல்லையில் கண்காணிப்பு

தமிழக-கேரளா எல்லை பகுதியில் இருக்கும் புளியரை சோதனை சாவடியில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story