கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.4½ கோடி மதிப்பில் மார்பக சிகிச்சை மையம்
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று இந்தியாவிலேயே முதன்முறையாக மார்பக பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.
சென்னை,
நிகழ்ச்சியை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சாந்தா குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கிவைத்தார். இந்த மார்பக பரிசோதனை மற்றும் சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சரோஜா, நிலோபர் கபில், வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் திறந்துவைத்தனர்.
அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-
இந்தியாவிலேயே முதல் முறையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.4.50 கோடி மதிப்பில் மார்பக பரிசோதனை மற்றும் சிகிச்சை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்கேன் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சோதனையின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கவும் நிபுணர் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் இந்த பரிசோதனையை செய்யவேண்டும். மார்பக பரிசோதனை மையத்தில் எடுக்கப்படும் ஸ்கேன் முடிவுகள் அன்றே வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பலூன்களை பறக்கவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் வசந்தாமணி மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story