எடப்பாடி அருகே பாரில் மதுகுடித்தவர் ‘திடீர்’ சாவு யார் அவர்? போலீசார் விசாரணை


எடப்பாடி அருகே பாரில் மதுகுடித்தவர் ‘திடீர்’ சாவு யார் அவர்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Jan 2019 4:15 AM IST (Updated: 4 Jan 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி அருகே பாரில் மதுகுடித்தவர் திடீரென இறந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எடப்பாடி, 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தை அடுத்துள்ளது நாச்சியூர். இங்கு அரசு மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதுக்கடையுடன் பார் உள்ளது.

நேற்று முன்தினம் மாலை இந்த மதுக்கடைக்கு வந்தவர்கள் மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு அதையொட்டி உள்ள பாருக்கு சென்று மது குடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் சைக்கிளில் அங்கு வந்தார். அவரும் பாரில் உட்கார்ந்து மது குடித்து கொண்டிருந்தார்.

திடீரென அவர் மயங்கி விழுந்து இறந்தார். இதை பார்த்ததும் அருகில் மது குடித்து கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி கொங்கணாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்தவர் யார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story