லக்னோவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போலீஸ் ஐ.ஜி. ரூபா பெயரில் அறை முன்பதிவு செய்த மர்ம பெண் பெங்களூரு போலீசில் புகார்


லக்னோவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போலீஸ் ஐ.ஜி. ரூபா பெயரில் அறை முன்பதிவு செய்த மர்ம பெண் பெங்களூரு போலீசில் புகார்
x
தினத்தந்தி 4 Jan 2019 3:30 AM IST (Updated: 4 Jan 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

லக்னோவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போலீஸ் ஐ.ஜி. ரூபா பெயரில் அறை முன்பதிவு செய்த மர்ம பெண் மீது பெங்களூரு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

லக்னோவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போலீஸ் ஐ.ஜி. ரூபா பெயரில் அறை முன்பதிவு செய்த மர்ம பெண் மீது பெங்களூரு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் ஐ.ஜி. ரூபா பெயரில்...

கர்நாடகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து வருபவர் ரூபா. இவர், தற்போது ஊர்க்காவல் படை போலீஸ் ஐ.ஜி.யாக இருந்து வருகிறார். இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஒரு சொகுசு அறையை கடந்த மாதம்(டிசம்பர்) 29-ந் தேதியில் இருந்து நேற்று வரை ஒட்டு மொத்தமாக 6 நாட்கள் ஒரு பெண் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி முன்பதிவு செய்திருந்தார். ஆனால் அந்த பெண் முன்பதிவு செய்தபடி நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்காக வரவில்லை.

முன்னதாக போலீஸ் ஐ.ஜி. ரூபா பெயரில் அறை முன்பதிவு செய்திருப்பது பற்றி, லக்னோவை சேர்ந்த போலீஸ் அதிகாரிக்கு ஓட்டலில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ் அதிகாரி, ஓட்டலில் அறை முன்பதிவு செய்திருப்பது குறித்து போலீஸ் ஐ.ஜி. ரூபாவை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். ஆனால் தான் எந்த அறையும் முன்பதிவு செய்யவில்லை என்றும், தனது பெயரை பயன்படுத்தி மர்ம பெண் அறை முன்பதிவு செய்திருப்பதாக போலீஸ் அதிகாரியிடம், ஐ.ஜி. ரூபா தெரிவித்தார்.

மர்ம பெண் மீது புகார்

இந்த நிலையில், தன் பெயரை தவறாக பயன்படுத்தி லக்னோவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை முன்பதிவு செய்த மர்ம பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெங்களூரு பனசங்கரி போலீஸ் நிலையத்தில், ஐ.ஜி. ரூபா புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மேலும் அந்த மர்ம பெண்ணை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story