சபரிமலைக்கு பெண்கள் சென்றதை கண்டித்து விராலிமலையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


சபரிமலைக்கு பெண்கள் சென்றதை கண்டித்து விராலிமலையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2019 4:15 AM IST (Updated: 4 Jan 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. சார்பில் சபரிமலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் 2 பெண்கள் சென்று சாமி தரிசனம் செய்ததை கண்டித்தும், அதற்கு துணை நின்ற கேரள கம்யூனிஸ்டு அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. சார்பில் சபரிமலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் 2 பெண்கள் சென்று சாமி தரிசனம் செய்ததை கண்டித்தும், அதற்கு துணை நின்ற கேரள கம்யூனிஸ்டு அரசை கண்டித்தும் விராலிமலை சுங்கச்சாவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராம சேதுபதி தலைமை தாங்கினார்.

மாநில துணை தலைவர் சுப்பிரமணியன், கரூர் பாராளுமன்ற அமைப்பாளர் சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கென்னடி, விராலிமலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராமமூர்த்தி மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். முடிவில் ஒன்றிய தலைவர் ராஜ் குமார் நன்றி கூறினார். 

Next Story