வேளாளர், வெள்ளாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்ட அகில இந்திய வேளாளர், வெள்ளாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்,
கரூர் மாவட்ட அகில இந்திய வேளாளர், வெள்ளாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் கார்வேந்தன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, ஒரு சில உட்பிரிவினை சேர்ந்த சமுதாயத்தினர் வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய முனைப்போடு இருக்கின்றனர். இது தமிழகத்தில் சாதி மோதல் ஏற்பட வழி வகுத்து விடும். எனவே, அத்தகைய முயற்சியை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வேளாளர், வெள்ளாளர்கள் அமைப்புகள், வ.உ.சி. பேரவையின் நிர்வாகிகள், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story