மும்பை-புனே இடையே மின்சார ரெயில் சேவை மத்திய ரெயில்வே முடிவு


மும்பை-புனே இடையே மின்சார ரெயில் சேவை மத்திய ரெயில்வே முடிவு
x
தினத்தந்தி 4 Jan 2019 4:00 AM IST (Updated: 4 Jan 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

மும்பை - புனே இடையே மின்சார ரெயில் சேவை தொடங்க மத்திய ரெயில்வே முடிவு செய்து உள்ளது.

மும்பை,

மும்பை - புனே இடையே மின்சார ரெயில் சேவை தொடங்க மத்திய ரெயில்வே முடிவு செய்து உள்ளது.

மின்சார ரெயில் சேவை

மும்பையில் மத்திய ரெயில்வே மெயின் மற்றும் துறைமுக வழித்தடங்களில் மின்சார ரெயில் சேவைகளை இயக்கி வருகிறது. இந்த சேவைகளை தினசரி சுமார் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மத்திய ரெயில்வே மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ள கர்ஜத் வரையிலும் மின்சார ரெயில்களை இயக்கி வருகிறது.

இதேபோல புனே - லோனவாலா இடையே 64 கி.மீ. தூரத்துக்கு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மலைப்பகுதி என்பதால் மும்பை - புனே இடையிலான வழித்தடத்தில் கர்ஜத் - லோனவாலா இடையிலான 28 கி.மீ. தூரத்துக்கு தான் மின்சார ரெயில் சேவை இல்லை.

மும்பை - புனே இடையே...

இதன் காரணமாக புனேயில் இருந்து தினசரி பணி நிமித்தம் உள்பட பல்வேறு காரணங்களுக்காக மும்பைக்கு வரும் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தான் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக மும்பையில் இருந்து புனே வரையிலும் 192 கி.மீ. தூரத்துக்கு புறநகர் ரெயில் சேவையை நீட்டிக்க செய்ய மத்திய ரெயில்வே முடிவு செய்து உள்ளது.

இதற்காக மலைப்பகுதியிலும் எந்த சிரமமும் இன்றி இயக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட பிரேக் வசதி கொண்ட 12 பெட்டி மின்சார ரெயிலை தயாரிப்பதற்காக சென்னை ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலைக்கு மத்திய ரெயில்வே கடிதம் எழுதி உள்ளது. அந்த ரெயில் கிடைத்ததும் உடனடியாக மும்பை - புனே இடையிலான மின்சார ரெயில் சேவை தொடங்கப்படும் என மத்திய ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story