ரெயில்வே பணிமனையில் உள்ள மரத்தில் பிணமாக தொங்கிய இளம்பெண் யார் அவர்? போலீஸ் விசாரணை
ரெயில்வே பணிமனையில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.
மும்பை,
ரெயில்வே பணிமனையில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் யார் என்பதை கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்கில் தொங்கிய இளம்பெண்
மத்திய ரெயில்வேயின் கல்யாண் பணிமனையில் உள்ள மரத்தில் நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் துப்பட்டாவால் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில்வே ஊழியர் ஒருவர் உடனடியாக இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
தூக்கில் தொங்கிய அந்த இளம்பெண்ணுக்கு 20 வயது இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இளம்பெண்ணின் கழுத்து பகுதியில் ரத்த காயங்கள் இருந்தன. எனவே அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் உண்மை தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story