கேரள அரசை கண்டித்து தேன்கனிக்கோட்டையில் கடையடைப்பு இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கேரள அரசை கண்டித்து தேன்கனிக்கோட்டையில் கடையடைப்பு போராட்டமும், இந்து அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை,
கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்குள் 2 பெண்கள் நுழைந்து சாமி தரிசனம் செய்ததை கண்டித்தும், கேரள அரசை கண்டித்தும் பா.ஜனதா, இந்து அமைப்புகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் சார்பில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜனதா, இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் கேரள அரசை கண்டித்தும், சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்து சாமி தரிசனம் செய்ததை கண்டித்தும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி தேன்கனிகோட்டை, தளி, கெலமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 75 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் இந்த பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், பா.ஜனதா, இந்து அமைப்பு சார்பில் பஜனை பாடல்களை பாடி ஊர்வலமாக சென்றனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கேரள அரசை கண்டித்தும், சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story