ஆன்-லைன் மூலம் வருங்கால வைப்பு நிதி பணப்பலனை 3 நாட்களில் பெறலாம் கூடுதல் ஆணையாளர் மதியழகன் பேட்டி


ஆன்-லைன் மூலம் வருங்கால வைப்பு நிதி பணப்பலனை 3 நாட்களில் பெறலாம் கூடுதல் ஆணையாளர் மதியழகன் பேட்டி
x
தினத்தந்தி 4 Jan 2019 9:30 PM GMT (Updated: 2019-01-05T02:19:26+05:30)

ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து வருங்கால வைப்பு நிதி அலுவலக பணப்பலனை 3 நாட்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று வருங்கால வைப்பு நிதி கோவை பெருமண்டல கூடுதல் ஆணையாளர் மதியழகன் கூறினார்.

நெல்லை, 

ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து வருங்கால வைப்பு நிதி அலுவலக பணப்பலனை 3 நாட்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று வருங்கால வைப்பு நிதி கோவை பெருமண்டல கூடுதல் ஆணையாளர் மதியழகன் கூறினார்.

இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆன்-லைன் மூலம்

வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் தங்கள் பணப்பலன்களை பெறுவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்கும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள யூ.ஏ.என். என்ற உலகளாவிய கணக்கு எண்ணுடன், செல்போன் நம்பர், ஆதார் கார்டு எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பித்தால் உடனே அந்த விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்குக்கு பணப்பலன்கள் சென்றுவிடும்.இந்த திட்டம் கடந்த நவம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை பெரு மண்டலத்தில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் மூலம் விண்ணப்பித்த 65 சதவீதம் பேருக்கு உடனடியாக பணம் வழங்கப்பட்டு உள்ளது. நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் மூலம் 78 சதவீதம் பேருக்கு பணம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரூ.6 லட்சம் வரை பணம் எடுக்கலாம். இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிப்பதற்காக ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் இ-சேவை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

வீடு கட்டும் திட்டம்

வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு வீடுகட்டி கொடுக்கும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் நட்டாத்தி கிராமத்தில் 50 வீடுகள் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நெல்லை மண்டல ஆணையாளர் சனத்குமார், நாகர்கோவில் மண்டல ஆணையாளர் ரமேஷ், உதவி ஆணையாளர்கள் பவன், விபேஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story