திருவண்ணாமலையில் நடந்த வாலிபர் கொலையில் சரண் அடைந்த பெண் உள்பட 5 பேர் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்
திருவண்ணாமலையில் செல்போன் கடையில் வேலைபார்த்த வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்த பெண் உள்பட 5 பேர் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 28). இவர் சென்னையில் வேலை செய்தபோது அங்குள்ள நெசப்பாக்கத்தை சேர்ந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. பின்னர் அவர் களது கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவரவே அவர் அதனை கண்டித்தார். இதனால் நாகராஜை பார்ப்பதை மஞ்சுளா நிறுத்திக் கொண்டார். கள்ளக்காதலை காட்டிக் கொடுத்தது அவரது மகன் ரித்தேஷ்தான் (10) என்பது நாகராஜுக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரித்தேஷை நாக ராஜ் கொலை செய்தார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அவர் திருவண்ணா மலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து செல்போன் கடையில் வேலை செய்து வந்தார்.
கடந்த 29-ந் தேதி மாலை கடைக்கு அருகே மர்ம கும்பலால் நாகராஜ் சரமாரி யாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவண்ணா மலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர். மேலும் இது குறித்து 5 தனிப்படை அமைக் கப்பட்டது. விசாரணையில் மஞ்சுளா தான் கள்ளக் காதலன் நாகராஜை கூலிப் படை மூலம் கொலை செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில் கொலை தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த மஞ்சுளா மற்றும் சூளைமேட்டை சேர்ந்த தினேஷ்குமார், அரும் பாக்கத்தை சேர்ந்த ஷியாம் சுந்தர், சந்தோஷ்குமார், சரவணன் ஆகிய 5 பேர் சென்னை ஜார்ஜ் டவுன் 7-வது நீதிமன்ற நீதிபதி பஷீர் முன்னிலையில் சரண டைந்தனர். மேலும் தலைமறை வாக இருந்த சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த சஞ்சீவி (19) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் நேற்று புழல் சிறையில் அடைக்கப் பட்டு இருந்த மஞ்சுளா, தினேஷ்குமார், ஷியாம்குமார், சந்தோஷ்குமார், சரவணன் ஆகிய 5 பேரை திருவண்ணாமலை டவுன் போலீசார் திருவண்ணாமலை கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர். அவர்களது முகம் கருப்புத் துணி போட்டு மறைக்கப்பட்டிருந்தது.
பின்னர் அவர்களை போலீசார் ஜே.எம்.1 கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு விக்னேஷ் பிரபு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தர விட்டார். இதையடுத்து அவர்களை போலீசார் பலத்த காவலுடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.
இதற்கிடையில் திருவண் ணாமலை டவுன் போலீசார் அவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த ஜே.எம்.1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story