காலமுறை ஊதியம் வழங்க கோரி செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


காலமுறை ஊதியம் வழங்க கோரி செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2019 4:00 AM IST (Updated: 5 Jan 2019 3:43 AM IST)
t-max-icont-min-icon

காலமுறை ஊதியம் வழங்க கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி,

தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் தர்மபுரி மாவட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனம் ராஜகோபால் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ரூபினா வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் அன்பரசு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கோர்ட்டு உத்தரவுப்படி செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்று 8 மாதங்களாகியும் விடுவிக்கப்படாத செவிலியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும். சீருடை மாற்றத்தில் பாகுபாட்டை களைய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story