நாகர்கோவிலில் கேரள முதல்-மந்திரி உருவபொம்மையை எரித்து போராட்டம்


நாகர்கோவிலில் கேரள முதல்-மந்திரி உருவபொம்மையை எரித்து போராட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2019 4:31 AM IST (Updated: 5 Jan 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் கேரள முதல்-மந்திரி உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நாகர்கோவிலில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் உருவ படங்களையும், உருவபொம்மையையும் எரித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்றும் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் பினராயி விஜயனின் உருவ பொம்மையை எரித்து பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இதில் மாவட்ட பார்வையாளர் தேவ், நிர்வாகிகள் முத்துராமன், நாகராஜன், திருமால், அஜித்குமார், ஜெகத் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபற்றிய தகவல் அறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உருவபொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story