எடப்பாடியில் சாலை பணியாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்
எடப்பாடியில் சாலை பணியாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
எடப்பாடி,
எடப்பாடி நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி ஆணை வழங்கிட வேண்டும், இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கிட வேண்டும், தனியார் பராமரிப்பு பணிக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் கலைவாணன் அந்தோணி, கிளை தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் பிரபாகரன், மாநில துணை தலைவர் தெய்வஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் முருகப்பெருமாள், மாநில செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.முடிவில் பழனிசாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story