மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் பரிசு திட்டங்களை அறிவித்தால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் பரிசு திட்டங்களை அறிவித்தால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Jan 2019 4:15 AM IST (Updated: 5 Jan 2019 10:53 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் பரிசு திட்டங்கள் எதையும் அறிவித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.

கிருஷ்ணகிரி, 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சில வணிக நிறுவனங்கள் பண்டிகை காலங்களில் தங்களின் சுய லாபத்திற்காக பரிசு குலுக்கல் என்ற திட்டத்தின் மூலம் விலையை கூட்டியும், தரமற்ற பொருட்களை விற்பனை செய்தும் வருகிறார்கள். மேலும் அளவு குறைப்பு, கலப்பட பொருட்கள் விற்பனை, பழைய இருப்பு பொருட்களை விற்பனை செய்தல் போன்றவற்றின் மூலம் பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

இது போன்ற ஏமாற்று வேலைகள் ஜவுளிக்கடை, பெட்ரோல் பங்க், ரியல் எஸ்டேட், ஸ்வீட் ஸ்டால், வெடிக்கடை போன்ற இடங்களில் நடைபெற்்று வருவதாகவும் புகார்கள் வந்துள்ளன.

ஆடி மாத சிறப்பு குலுக்கல், ரம்ஜான் பண்டிகை, தீபாவளி பண்டிகை, கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை ஆகிய பண்டிகை தினங்களை முன்னிட்டு சிறப்பு பரிசு குலுக்கல் திட்டங்கள் நடத்துவதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே இனி வரும் காலங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவ்வாறான பரிசு திட்டங்களை எந்தவித வணிக நிறுவனங்களும் அறிவிக்க கூடாது. அவ்வாறு எந்த நிறுவனங்களாவது அறிவிப்பது தெரிய வந்தால் தமிழ்நாடு பரிசு திட்டங்கள் (தடை) சட்டம் 1979-ன் கீழ் போலீசார் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story