தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jan 2019 3:30 AM IST (Updated: 6 Jan 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தம்

மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கக்கூடாது. வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 8, 9-ந்தேதிகளில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடக்க உள்ளது.

ஆர்ப்பாட்டம்

இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட தொலை தொடர்பு பொதுமேலாளர் அலுவலகம் முன்பு, பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம், தேசிய தொலை தொடர்பு சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஆகியவை சார்பில் வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேசிய தொலை தொடர்பு சங்க மாவட்ட தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயமுருகன், தேசிய தொலை தொடர்பு சங்க மாவட்ட செயலாளர் பாலகண்ணன் ஆகியோர் பேசினர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

Next Story