பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது


பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 6 Jan 2019 4:00 AM IST (Updated: 6 Jan 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

பதிவு செய்ய வேண்டும்

தமிழகத்தில் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் கரும்பு, முந்திரி, உலர்திராட்சை, ஏலக்காய் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 963 ரேஷன் கடைகளில் உள்ள 4 லட்சத்து 84 ஆயிரத்து 550 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. ரேஷன் கடை விற்பனையாளர்கள் பாயிண்ட் ஆப் சேல் எந்திரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.

தாசில்தார்கள் ஆய்வு

பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் கார்டில் உள்ள யாராவது ஒரு நபர் நேரில் வந்து வாங்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு எந்தெந்த பகுதிகளுக்கு எந்த நாளில் வழங்கப்படும் என்ற விவரம் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒட்டப்பட வேண்டும். இதனை உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கப்படுவதையொட்டி ரேஷன் கடைகளில் காவல் துறையின் மூலம் தேவையான பாதுகாப்புகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு சென்றடையும் வகையில் அலுவலர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் அருளரசு, உதவி கலெக்டர்கள் விஜயா, கோவிந்தராசு, மாவட்ட வழங்கல் அலுவலர் சங்கரநாராயணன் மற்றும் தாசில்தார்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story