செல்போனில் வேறுநபருடன் சிரித்து பேசிய கள்ளக்காதலி குத்திக்கொலை வாலிபர் வெறிச்செயல்
செல்போனில் வேறுநபருடன் சிரித்து பேசிய கள்ளக்காதலியை வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கவுண்டர் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 32). திருமணம் ஆகி விவாகரத்தானவர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் காவேரிப்பட்டணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் முறையே 9 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
செல்வி கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் பகுதியில் உள்ள ஒரு பரிசு பொருட்கள் விற்பனை கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று வழக்கம் போல அவர் கடைக்கு வந்தார். பிற்பகல் 3 மணி அளவில் கடையில் இருந்து செல்வியின் அலறல் சத்தம் கேட்டது.
இதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி சென்று பார்த்தனர். அப்போது கடைக் குள் செல்வி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக காவேரிப்பட்டணம் அண்ணா நகரை சேர்ந்த குலோப்ஜான் என்பவரின் மகன் தவுலத் (24) கிருஷ்ணகிரி டவுன் போலீசில் சரண் அடைந்தார். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான் காவேரிப்பட்டணத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலைப் பார்த்து வந்தேன். அந்த கடையில் செல்வியும் வேலை பார்த்தார். அவர் கணவரை பிரிந்தவர் ஆவார். கடையில் வேலை பார்த்த நாட்களில் எனக்கும், செல்விக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் நாங்கள் பழகி வந்தோம்.
மேலும் நான் எனது சம் பள பணத்தை அவரிடம் கொடுத்து வந்தேன். இந்த நிலையில் சில நாட்களில் நாங்கள் 2 பேரும் அந்த துணிக்கடை வேலையில் இருந்து நின்று விட்டோம். நான் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தேன். அதேபோல செல்வியும் ஜக்கப்பன் நகரில் உள்ள ஒரு பரிசு பொருட்கள் விற்பனை கடையில் வேலை பார்த்து வந்தார். ஆனாலும் எங்களுக்குள் பழக்கம் தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில் இன்று (அதாவது நேற்று) மதியம் என்னை தொடர்பு கொண்ட செல்வி ரூ.2 ஆயிரம் கேட்டார். இதற்காக நான் அவரை சந்திக்க சென்றேன். அப்போது செல்வி மட்டும் கடையில் தனியாக இருந்தார். மேலும் அவர் செல்போனில் யாருடனோ சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார். இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரிடம், ‘நீ யாருடன் பேசுகிறாய்?’ என்று கேட்டு தகராறு செய்தேன்.
அப்போது செல்வி, ‘நான் யாருடன் வேண்டும் என்றாலும் பேசுவேன். நீ எதற்காக கேட்கிறாய்?’ என்று கேட்டு என்னுடன் வாக்குவாதம் செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த நான் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்திக்கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story