பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் வணிக நிறுவனங்களில் 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் வணிக நிறுவனங்களில் 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Jan 2019 10:45 PM GMT (Updated: 5 Jan 2019 7:21 PM GMT)

பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் வணிக நிறுவனங்களில் 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பாப்பாரப்பட்டி,

பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை வணிக நிறுவனங்கள், தள்ளுவண்டி கடைகள், சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையொட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜலேந்திரன் தலைமையில் அலுவலர்கள் பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், தள்ளுவண்டி கடைகள் மற்றும் சாலையோர கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது வணிக நிறுவனங்களில் பயன்படுத்திய தடை செய்யப்பட்ட 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடைக்காரர்களுக்கு ரூ.4700 அபராதம் விதித்தனர். இந்த சோதனையின் போது பொதுமக்களுக்கு மாற்றுப்பொருட்களாக மக்கும் தன்மையுள்ள துணிப்பை, காகிதப்பை, வாழை இலை, முறுக்கன் இலை, கப்புகள், பாக்கு மட்டைத்தட்டுகள், கப்புகள், கண்ணாடி, எவர் சில்வர் தம்ளர்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story