பள்ளிக்கூட வேனில் சிறுமி பாலியல் பலாத்காரம்: ஆசிரியர் உள்பட 2 பேர் சிறையில் அடைப்பு
பள்ளிக்கூட வேனில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியர் உள்பட 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்காசி,
பள்ளிக்கூட வேனில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியர் உள்பட 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறுமி பாலியல் பலாத்காரம்
தென்காசி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4 வயது சிறுமி படித்து வருகிறாள். இவள் தனது ஊரில் இருந்து பள்ளிக்கூட வேனில் தினமும் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.
இவ்வாறு வரும்போது அந்த சிறுமி அவளது வீட்டில் கடைசியாக இறங்குவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பள்ளி விளையாட்டு ஆசிரியர் ராஜபாளையத்தை சேர்ந்த இளையராஜா (வயது 39), வேன் டிரைவர் சொக்கம்பட்டியை சேர்ந்த பரமசிவம் (56) ஆகியோர் பள்ளிக்கூட வேனில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள்.
இதைத்தொடர்ந்து பெற்றோர் இதுபற்றி தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
சிறையில் அடைப்பு
அதன்பேரில் இளையராஜா, பரமசிவம் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் சரஸ்வதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து செங்கோட்டை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். மாஜிஸ்திரேட்டு லிங்கம் விசாரணை நடத்தி இருவரையும் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி 2 பேரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
Related Tags :
Next Story