மஞ்சள் நீராட்டு விழாவில் விருந்து சாப்பிட்ட 34 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு
பெண்ணுக்கு நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் விருந்து சாப்பிட்ட 34 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மேலும் அவர்கள் சுகாதார நிலையத்தில் போதிய வசதி இல்லாமல் அவதி அடைந்தனர்.
வரதராஜன்பேட்டை,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 36). இவரது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அப்போது விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. அதில் சாதம், சாம்பார், ரசம், வத்தல் குழம்பு, வடை, பாயாசம், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் பொரியல் என சைவ சாப்பாடு பரிமாறப்பட்டது. இதனை 50-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டனர். இதையடுத்து சிறிது நேரத்தில் அவர்கள் அனைவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக அவர்களை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இதில் ஆண்டிமடம் மருத்துவமனையில் 6 ஆண்கள் உள்பட 27 பேரும், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் 7 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றவர்களுக்கு போதிய வசதி இல்லாததால் ஒரு கட்டிலில் 2 பேர் வீதம் படுக்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவக்குழுவினர் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்றனர். அதில் பெரியகருக்கை கிராமத்தை சேர்ந்த 52 பேருக்கும், ஸ்ரீராமன் கிராமத்தை சேர்ந்த 33 பேருக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார், வரதராஜன்பேட்டை மருத்துவ அலுவலர் கண்ணன், நடமாடும் மருத்துவக்குழு மருத்துவ அலுவலர் குமாரி, பள்ளி சுகாதார மருத்துவக்குழு மருத்துவ அலுவலர்கள் சந்தியப்பிரியா, கோடிசுந்தரம், ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எதனால் விருந்து சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஞ்சள் நீராட்டு விழாவில் விருந்து சாப்பிட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story