இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jan 2019 4:15 AM IST (Updated: 6 Jan 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம் திருமானூரில் மணல் குவாரி செயல்படுவதை நிறுத்தக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கடந்த சில நாட்களாகவே பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூரில் மணல் குவாரி செயல்படுவதை நிறுத்தக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கடந்த சில நாட்களாகவே பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனை கண்டித்து நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உலகநாதன், ஒன்றிய செயலாளர்கள் ராமநாதன், அபிமன்னன், பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story