பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கழிவு பஞ்சு நூல் பைகளுக்கு தேவை அதிகரிப்பு


பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கழிவு பஞ்சு நூல் பைகளுக்கு தேவை அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 Jan 2019 3:15 AM IST (Updated: 6 Jan 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் கழிவு பஞ்சு நூல் பைகளுக்கு தேவை அதிகரித்துள்ளது.

கோவை,

ஒரு முறை பயன்படுத்தி விட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாற்று பொருட்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கழிவு பஞ்சில் இருந்து எடுக்கப்படும் நூலில் இருந்து தயாரிக்கப்படும் பைகளுக்கு தற்போது தேவை அதிகரித்துள்ளது. இது குறித்து கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் மில்கள் (ஓபன் எண்ட் மில்) சங்க செயலாளர் அருள்மொழி கூறியதாவது:-

தமிழகத்தில் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் மில்கள் 400-க்கும் அதிகமாக உள்ளன. கோவை யில் 100 மில்கள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 20 லட்சம் கிலோ நூல் உற்பத்தி செய்யப்படு கிறது. அவை, தமிழகத்தில் இயங்கும் விசைத்தறிகள், கைத்தறிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த நூலைக் கொண்டு காடா துணி தயாரிக்கப்பட்டு கைலி, பாவாடை, நைட்டி போன்ற ஆடைகள் தயாரிக்கப்படுகிறது.

தற்போது துணி பைகளுக்கு தேவை அதிகரித்து உள்ளது. இதனால் கழிவு பஞ்சில் இருந்து எடுக்கப்படும் நூல் மூலம் நெய்யப்படும் காடா துணி பைகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த பைகள் மிகவும் உறுதியாக இருக்கும். இதற்கான செலவும் குறைவு. சாதாரண துணியில் தைக்கப்படும் பையை விட, கழிவு பஞ்சு நூல் மூலம் நெய்யப்படும் துணியில் தைக்கப்படும் பை 10 ரூபாய் வரை விலை குறைவாக இருக்கும். மேலும் இந்த பைகள் எளிதில் மக்கக் கூடியது. அதே நேரத்தில் அந்த பைகளில் 10 கிலோ எடை வரை உள்ள பொருட் களை எடுத்துச் செல்லலாம். சோமனூர், பல்லடம் சுற்றுவட் டார பகுதிகளில் இந்த துணியை பயன்படுத்தி பைகள் தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகள் தற்போது அதிகரித்துள்ளன. பைகள் தைப்பதற் கான துணி தேவை அதிகரித்து உள்ளது. எனவே விசைத்தறிகளில் இருந்து இந்த துணிகள் அதிகம் கொள்முதல் செய்யப்படுகின்றன. அதே போன்று விசைத்தறிகளுக்கு தேவையான நூல் சப்ளை செய்யும் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் மில்களும் (ஒபன் எண்ட் மில்) தனது உற்பத்தியை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story