திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவோம் வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி


திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவோம் வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 6 Jan 2019 4:30 AM IST (Updated: 6 Jan 2019 3:35 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவோம் என்று வசந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் ராமர் கோவிலில் நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் வசந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். எனவே நாங்கள் அனைவரும் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன் வெற்றிக்காக பாடுபடுவோம்.

பொங்கல் பரிசாக தமிழக அரசு ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஒகி, கஜா புயல் தாக்கியதில் மக்கள் சிரமப்படுகிறார்கள். இதை ஒரு ஆறுதல் பரிசாக வழங்கியிருக்கிறது. மக்களுக்கு கிடைக்கும் எந்த ஒரு பொருளும் நிச்சயம் பலன் உள்ளதாக தான் இருக்கும். அதை நாங்கள் பாராட்டுகின்றோம்.

மேகதாது அணைவிவகாரத்தில் பிரதமர் மோடி கர்நாடக அரசுக்கு நேரடியாக உதவி செய்யாமல் பசுமை தீர்ப்பாயம் மூலம் உதவி செய்கிறார். ஆனால் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஏனைய எதிர்கட்சிகள் உதவியுடன் ராகுல்காந்தி தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். வரும் பாராளுமன்றதேர்தலில் ராகுல்காந்தி ஆணையிட்டால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story